சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று (மார்ச் 13) இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று (மார்ச் 13) இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த போது குறுகிய காலத்தில் காளியம்மாள் பிரபலம் அடைந்தார். இவர் 2019, 2024ல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 2021ல் சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டார்.

2024ல் நடந்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் கட்சியில் இருந்து விலகினார். பிறகு அவருக்கு வலை வீசி, கட்சியில் இணைக்க திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பேச்சு நடத்தின.

ஆனால், எந்த கட்சியிலும் சேராமல் அமைதி காத்த காளியம்மாள், சென்னையில் இன்று (மார்ச் 13)அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஐ சந்தித்து கட்சியில் இணைந்தார்.

Source link