புதுச்சேரி: `கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து!’ – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

`பெட்ரோல், டீசல் 17 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது…’

அதனால் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டம், ஒழுங்கு சீனியர் எஸ்.பி கலைவாணன், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் முத்து மீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `பெட்ரோல் பங்குகளில் வாகனங்களில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். அதைத் தவிர்த்து கேன்களில் வழங்கக் கூடாது என்று பெட்ரோல் பங்க் நிறுவனங்களுக்கு கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்

அதேபோல தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும், பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்கப்படுகிறதா என்பதை பெட்ரோலிய நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும்.

அரசின் உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அத்துடன் பொருந்தக் கூடிய அனைத்து சட்ட விதிகளின்படியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில் 17 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link