சென்னை: தினத்தந்தி குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மனைவி மாலதி ஆதித்தன் இன்று காலமானார்.
சென்னை போயஸ கார்டனில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
தமிழக பாஜ தலைவர் நயினார்நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
