புதுடில்லி: உலகளாவிய பொருளாதாரம் மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியை

புதுடில்லி: உலகளாவிய பொருளாதாரம் மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியை உருவாக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி பார்லி. யில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று லோக்சபா கூடியதும், இந்த விவகாரத்தை முன் வைத்து மீண்டும் அமளியில் இறங்கின. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்ததால் அவையானது மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் லோக்சபாவில் 2026ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது;

உலகளவில் பொருளாதாரம் மற்றும் போர்களின் போது ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் புதிய பொருளாதார நிதி உருவாக்கப்படும். 2025-26ம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளை தாண்டி செலவினங்களில் எவ்வித அதிகரிப்பும் இல்லை.

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

Source link