தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பள்ளி சிறுமியின் குடும்பத்திற்கு

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பள்ளி சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற திமுக எம்பி கனிமொழியை ஊர் மக்கள் முற்றுகையிட்டு, கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து ஊர்மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந் நிலையில், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற திமுக எம்பி கனிமொழி கிராமத்திற்கு சென்றார். அவருடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோரும் சென்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அவர்கள் வெளியே வந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த கிராம மக்கள், கனிமொழியையும், உடன் வந்திருவர்களையும் முற்றுகையிட்டனர். நாங்கள் 2 நாட்கள் கண்ணீரோடு போராடிக் கொண்டு இருக்கிறோம். உடனடியாக வராமல் இன்று (3வது நாள்) வருவது ஏன்? என்று அவர்கள் கேள்வி, கேள்வி மேல் எழுப்பினர். கிராம மக்களை சமாளித்த கனிமொழி பேசியதாவது;

நிர்வாக மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தான் தாமதம் ஏற்பட்டது. ஆனால் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். உங்களின் வேதனையில் நானும் ஒரு பெண்ணாக பங்கேற்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. இது ஒரு விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

இதனிடையே விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கை;

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதி கேட்டு பார்லி. முதல் நீதிமன்றம் வரை அதிமுகவின் குரல் ஒலித்து வருகிறது.

.களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி.

இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் ஸ்டாலின் அவர்களே? காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?

இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. மார்ச் 17ம் தேதியன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தூத்துக்குடி நிர்பயாவுக்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும். விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி ஜெயலலிதா தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Source link