ஈரோடு: வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா., தேர்தலில் போட்டியிட 12 தொகுதிகளை கேட்டுள்ளது.
த.மா.கா., சார்பில் ‘போதை ஒழிப்போம்; சமூகம் காப்போம்’ தலைப்பில், ஈரோட்டில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அதில் பங்கேற்ற த.மா.கா., துணை தலைவர் விடியல் சேகர், பொதுச்செயலர் யுவராஜா ஆகியோர் அளித்த பேட்டி:
போதை பொருள் கலாசாரம் அதிகரித்து விட்டது. அதை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு தவறியதால், கொள்ளை, கொலை, சிறுமியர் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாவது என குற்றங்கள் நடக்கின்றன. எங்கள் கட்சியின் கொள்கை மது ஒழிப்பு; எனவே, தேர்தலுக்காக இப்பிரச்னையை கையில் எடுக்கவில்லை.
மது ஒழிப்பு குறித்து, தேர்தல் வாக்குறுதியில் தெரிவிப்பது பற்றி, எங்கள் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியின் தலைமைக்கும் தெரிவிப்போம். வரும் சட்டசபை தேர்தலில், த.மா.கா.,வுக்கு 12 தொகுதிகள் கேட்டுள்ளோம். கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும்போது, உரிய தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். அவ்வாறு அவர்கள் கூறினர்.
