கிரண் ஜார்ஜ் வெற்றி: சுவிஸ் ஓபன் பாட்மின்டனில்

பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தருண் வெற்றி பெற்றனர்.

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூரின் லோ கீன் யேவ் மோதினர். இதில் கிரண் ஜார்ஜ் 23-21, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ மோதினர். இதில் தருண் 16-21, 21-16, 7-2 என முன்னிலையில் இருந்த போது ஜப்பான் வீரர் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து தருண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங் மோதினர். இதில் ஏமாற்றிய மாளவிகா 11-21, 15-21 என தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-15, 21-14 என டென்மார்க்கின் ஜெஸ்பர் டோப்ட், அமாலி ஜோடியை வீழ்த்தியது.

Source link