நமது நிருபர்
”தர்மபுரி மாவட்டம் டேஞ்சராக உள்ளதால், 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம்,” என, தர்மபுரியில் நடந்த சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
தர்மபுரியில், தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி பேசியது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் வந்தாலும் வரவேற்பு நன்றாக தான் கொடுக்கிறீர்கள். ஆனால், தேர்தல் என்று வந்து விட்டால், நம்முடைய சில செயல்பாடுகளால் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் மிகவும் ‘டேஞ்சராக’ உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள, 5 தொகுதிகளிலும் தோல்வியடைந்தோம். அதேசமயம், லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றாலும், பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.
எனவே, நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வரும் சட்டசபை தேர்தலில், 5 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்வதற்கான பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
