மி யூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், நிதி மேலாண்மையை சீரமைக்கவும் புதிய விதிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2026, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி,
முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்குவதில் ஏற்படும் நேர இடைவெளியை சமாளிக்க, வங்கிகளில் ‘இன்ட்ராடே’ கடன் வாங்க அனுமதி அளிக்கப்படுகிறது
அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதே நாளில் வரவேண்டிய நிலுவை தொகையின் அளவுக்கு மட்டுமே கடன் பெற முடியும்
பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்யும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை சமாளிக்க, ஈக்விட்டி சார்ந்த இண்டெக்ஸ் பண்டுகள் மற்றும் இ.டி.எப்.,கள் கடன் வாங்க அனுமதிக்கப்படும். இது குறிப்பாக, சந்தையின் ‘குளோசிங் ஏல அமர்வில்’ பங்கேற்க உதவும்
கடன் வாங்குவது குறித்த கொள்கை முடிவுகளை அந்தந்த நிறுவனத்தின் வாரியம் மற்றும் டிரஸ்டிகள் அங்கீகரிக்க வேண்டும்
இந்த கடனுக்கான வட்டி அல்லது நஷ்டம் ஏற்பட்டால், அதை சம்பந்தப்பட்ட நிறுவனமே ஏற்க வேண்டும்; முதலீட்டாளர்கள் மீது சுமத்த கூடாது
கடன் வாங்கும் கொள்கைகளை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
