ஐ.டி.எப்.சி., வங்கி மோசடி: 90 வங்கி கணக்குகளை முடக்கிய ஈ.டி.,

புதுடில்லி:ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியில் ஹரியானா அரசின் 590 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் 90 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஈ.டி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

பல போலி நிறுவனங்கள் வாயிலாக தங்கம் வாங்கியதாக போலியான பில்களை தயாரித்துள்ளனர். சண்டிகர், குருகிராம், பெங்களூரு உள்ளிட்ட 19 இடங்களில் மார்ச் 11 அன்று சோதனை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களின் பணம் போலி நிறுவனங்கள் வாயிலாக பல அடுக்குகளாக மாற்றி பண மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

நகைக்கடைக்காரர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு நகை வாங்கியதாக போலியான பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டாக முன்னாள் வங்கி ஊழியர்கள் உதவியோடு இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் 6 வங்கி ஊழியர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவித்தன.

Source link