முருங்கை, மிளகாய் ஏற்றுமதி வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள அரசு அழைப்பு

சென்னை:’ஏற்றுமதி வர்த்தகத்தில் இயற்கை முறை உலர் முருங்கை இலை, மிளகாய் ஆகியவற்றுக்கு தேவை அதிகம் உள்ளதால் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அரசின் சந்தை பிணைப்பை பயன்படுத்தி ஏற்றுமதி சந்தையில் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம்’ என டி.என்.எபெக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் முருங்கை ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்தவும், முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம், மதுரையில் செயல்பட்டு வருகிறது.

சிறு, குறு, நடுத்தர தொ ழில் நிறுவனங்கள் துறையின் டி.என்.எபெக்ஸ் எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகளவில் ஏற்றுமதி சந்தையில் உலர் முருங்கை இலை பொருட்கள் மற்றும் மிளகாய்க்கு தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழகத்தில் இருந்து அவற்றின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், நேரடியாக சந்தைப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் டி.என்.எபெக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறது.

எனவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் இயற்கை முறை உலர் முருங்கை இலை, மிளகாய்க்கு தேவை அதிகம் உள்ளதால், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், டி.என்.எபெக்ஸின் சந்தை வாய்ப்பை பயன்படுத்தி, ஏற்றுமதி சந்தையில் நேரடியாக பயன்பெற தமிழக அரசு கேட்டு கொள்கிறது.

டி.என்.எபெக்ஸ் நிறுவனத்தை, ‘md*******@****ov.in மற்றும் me************@****ov.in‘ என்ற மின்னஞ்சல் முறையில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கடந்த பிப்., 27ல் மூன்று தனியார் நிறுவனங்களுடன், டி.என்.எபெக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

*,150 டன் உலர் முருங்கை இலை, 700 டன் மிளகாய் ஆகியவை, விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்

*தமிழகத்தில், 800 ஏக்கர் முருங்கை இலை சாகுபடி, 1,000 ஏக்கர் மிளகாய் சாகுபடியை உறுதி செய்ய வழி.

Source link