நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 14) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 14) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* சென்னை மக்களின் கனவாகிய வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை இன்று தொடங்கியது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு அதிகாலை 5.25 மணிக்கு முதல் ரயில், வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு காலை 6.05 மணிக்கு சென்றடைந்தது. இது சென்னையின் புறநகர் ரயில் போக்குவரத்தில் முக்கிய மைல்கல்லாகும்.

* ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், இன்று வளைகுடா நாடுகளுக்கு 80 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காசியாவில் சிக்கி தவிப்பவர்களை தாயகம் அழைத்து வர இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

* இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ், தனது காதலியை இன்று கரம்பிடிக்கிறார். உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் இவர்களின் திருமண விழா நடக்கிறது.

* தமிழகம் முழுவதும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெறுகிறது. முகாமில் தெரிவிக்கப்படும் குறைகளை விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக, தவெக தலைவர் விஜய், இன்று பிற்பகல் சென்னையில் இருந்து டில்லி செல்கிறார். ஏற்கெனவே 2 முறை விசாரணை நடந்த நிலையில், நாளை விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.

விஜய் இன்று டில்லி செல்லும் நிலையில், சென்னையில் நேற்று திடீரென மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, ‘கூட்டணி அமைக்கலாமா’ என, அக்கட்சி தரப்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் விஜயின் டில்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

* தமிழின் பங்குனி, மலையாள மீனத்தின் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது.

இன்றைய போட்டிகள்

* சுவிஸ் ஓபன் பாட்மின்டன்- அரையிறுதி

இடம்: பசல், சுவிட்சர்லாந்து; நேரம்: மாலை-4.30 மணி

* பிரிமியர் லீக் கால்பந்து

அணிகள்: ஆர்சனல்-எவர்டன், இடம்:லண்டன், நேரம்: இரவு 11 மணி.

Source link