சிறை: “ரஜினிகாந்த் சார் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன்”- விக்ரம் பிரபு|vikram prabu about rajinikanth statement

நடிகர் ரஜினிகாந்த் சார் சொன்னது போல, காது கேட்காத தவளையாகவே சினிமாவில் பயணித்து வருகிறேன்.

‘கும்கி’யில் இருந்து ‘சிறை’ வரை, காது கேட்காத தவளையாகவே இருந்து வருகிறேன். வெற்றியும், தோல்வியும் சந்தித்து வருகிறேன்.

சினிமாவில் உள்ள அரசியல், தட்டியும், தூக்கியும் விடும் ஆசாமிகள் என எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டுள்ளேன்.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

25 ஆண்டுகள் கடந்தும், இதுதான் ஆரம்பம் என்பது போல நகருகிறேன். ‘நான் உனக்கு உதவி எல்லாம் பண்ண மாட்டேன். நீயே தான் கற்றுக்கொண்டு வர வேண்டும்’ என்று அப்பா சொன்னார்.

அதற்கு ஏற்றமாதிரி விஷயங்களைக் கற்றுக்கொண்டு தான் வந்திருக்கிறேன். முதல் படத்தில் ‘கும்கி’ யானையை பிடித்து சென்றதுபோல, ஒவ்வொரு நாளும் இந்த சினிமாவின் கையை பிடித்து சென்று கொண்டிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link