கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், ‘கார்க் தீவு’.இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா.ட்ரம்ப் என்ன சொல்கிறார்?இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், “எனது வழிகாட்டுதலில் கார்க் தீவில் உள்ள ராணுவ தளவாடங்கள் தாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.ட்ரம்ப்

ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கோ, பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் வந்தால், எதுவும் யோசிக்க‌மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின்‌ எரிசக்தி தளவாடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தது ஈரான்.இப்போது அமெரிக்கா கார்க் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை என்றாலும், கார்க் தீவு மீதான தாக்குதலை ஈரான் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது.ஈரான் பதிலடிஇன்று காலை (இந்திய நேரப்படி) ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.இனி ஏதேனும் ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவிற்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய 5 அமெரிக்க விமானங்களை ஈரான் தாக்கியுள்ளது என்று ‘The Wall Street’ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.ஈரானின் இந்தத் தாக்குதல், மிரட்டல் அனைத்துமே கார்க் தீவிற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நடவடிக்கையே.

Source link