இனிமேல் எல்லாம் அக்கா தான்… உற்சாகத்தில் கனி டீம்! | Kanimozhi Karunanidhi’s team in DMK is said to be in high spirits

சந்தோஷத்தில் கனி, வருத்தத்தில் ஆ.ராசா!

இந்த அறிவிப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது, “மாணவரணியின் பொறுப்பாளரான துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஏற்கனவே ராஜீவ் காந்தி செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். கூடவே அணிக்கு புதிய செயலாளர் நியமனத்துக்கு அவர் வேறொரு நபரைப் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த சூழலில் ஆள் மாறியிருப்பதில் ராசா தரப்பு வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், கனிமொழி மண்டல பொறுப்பாளராக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வினை அவரே முடிவுசெய்யட்டும் என்று முதல்வர் சொல்லியிருந்தார்.

கனிமொழி கருணாநிதி

கனிமொழி கருணாநிதி

ஏற்கனவே கனிமொழி பரிந்துரையில் சிலருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது தொடங்கி இப்போது அவர் சொன்ன நபரை முக்கிய அணியின் செயலாளராக நியமித்தது வரை கனிமொழியின் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாகத் தட்டாமல் செய்து கொடுக்கிறார் தலைவர். இதனால், கட்சியின் கனி அக்காவின் கை ஓங்கியிருப்பதாக “இனி நாங்க தான்’ என்று சொல்லி ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறது கனிமொழி தரப்பு. அதே நேரத்தில் மாநில அரசியலில் அவர் அதீத ஆர்வம் காட்டுவதாக அவர் தரப்பு செய்திகளைக் கிளப்பிவிட்ட நிலையில் அவரை சரிக்கட்டப் பார்க்கிறதா தலைமை என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது” என்றார்கள் விளக்கமாக.

Source link