கோவை: திமுக கூட்டணியில் உள்ளே இருக்கும் சலசலப்பை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழக அரசியலில் எப்பொழுதும்

கோவை: திமுக கூட்டணியில் உள்ளே இருக்கும் சலசலப்பை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழக அரசியலில் எப்பொழுதும் தேர்தல் தேதி நெருங்கும் போது டுவிஸ்ட் இருக்கும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஒன்றுமில்லாத காங்கிரசுக்கு 3 தொகுதிகள் உயர்த்தி கொடுக்கிறீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி நாங்கள் இவ்வளவு கஷ்டம் படுகிறோம்.

எங்களுக்கு என் சீட் கொடுக்கவில்லை. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கிளம்பியாச்சு. வைகோ 4 தொகுதிகள் என்கிறார். எப்படிப்பட வைகோ இப்படி ஆகிவிட்டார். எத்தனை தொகுதியில் நின்றவர். தமிழக அரசியலை மாற்ற வேண்டும் என நினைத்தவர்.

ஒரு சீட், இரண்டு சீட்

அந்த 4 தொகுதியிலும் உதயசூரியன் 3. எங்கள் சின்னம் ஒன்று என்று சொல்கிறார். அந்த கூட்டணியில் இருந்து தலைவர்கள் வெளியே வருவதை நான் பார்க்கிறேன். திருமாவளவன் கண்டிப்பாக இவர்கள் கொடுக்கும் 6,7 சீட்களை ஏற்றுக்கொள்ள போவது கிடையாது.

கூட்டணியில் இருந்து விசிக, கம்யூனிஸ்ட் வெளியே வந்து வேறு கூட்டணியுடன் நிற்கிறார்களா, தனியாக நிற்கிறார்களா என்று தெரியாது. திமுக யாரு வந்தாலும் பிடித்து ஒரு சீட், இரண்டு சீட் என்று கொடுத்து அவர்களோடு இத்தனை ஆண்டுகாலமாக பயணம் செய்தவர்களுக்கு ஒரு சீட், இரண்டு சீட் என்று குறைக்கும் போது, எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள்.

கூட்டணியில் மாற்றம் வருமா என்று கேட்டீர்கள். கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுகவின் கூட்டணியை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம். உள்ளே இருக்கும் சலசலப்பை பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழக அரசியலில் எப்பொழுதும் தேர்தல் தேதி நெருங்கும் போது டுவிஸ்ட் இருக்கும்.

இந்த முறையில் என்ன மாற்றம் வரும் என்று பொருந்திருத்து பார்ப்போம். எரிபொருள் தட்டுப்பாடு என திமுக கூட்டணி பொய்யை பரப்பி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து தவெகவிடம் தான் கேட்க வேண்டும். விஜய்க்கு பாஜ எந்த நெருக்கடியும் தரவில்லை

ரீல்ஸ் போடும் முதல்வர்

தேஜ கூட்டணி பலமாக உள்ளது, யாரையும் எதிர்பார்த்து இல்லை. விளாத்திக்குளம் சிறுமி மாயமான மார்ச் 10ம் தேதியே தூத்துக்குடி குளத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்காமல் போலீசார் அலட்சியம் செய்துள்ளனர். சிறுமி மாயமான பிறகு தேடுதல் நடந்த இடத்திலேயே சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

புகார் கொடுத்த உடனேயே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி தற்போது உயிரோடு இருந்திருப்பார். விளாத்திகுளம் போலீசாரின் தோல்வி என்று சொல்வதை விட, துறையை நிர்வாகிக்க கூடிய முதல்வர் ஸ்டாலினின் முழுத் தோல்வி. இது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஸ்டாலின் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கோவையில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link