நமது நிருபர்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பு பயன்படுத்தும் அனைத்து ஹோட்டல்கள், டீ கடைகள், கிளவுட் கிச்சனுக்கு 1 யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம். உணவகங்கள் காய்கறி வாங்குவதை குறைத்துள்ளதால் காய்கறிகள் வீணாவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்பு பயன்படுத்தும் அனைத்து ஹோட்டல்கள், டீ கடைகள், கிளவுட் கிச்சனுக்கு 1 யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும். காஸ் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் வரை மின்கட்டண சலுகை தொடரும். விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
