டெஹ்ரான்: அண்டை நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதலை ஈரான் கைவிட வேண்டும் என்று பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல், 2 வாரங்களைக் கடந்து விட்டது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, சவுதி அரேபியா, யுஏஇ, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. விமான நிலையங்கள், முக்கிய பகுதிகள் குறிவைத்து தாக்கப்படுவதால், வளைகுடா நாடுகளில் சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அண்டை நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என்று ஐநா மட்டுமல்லாது, இந்தியா போன்ற நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், அண்டை நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதலை ஈரான் கைவிட வேண்டும் என்று பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளுவதற்கான தாக்குதலை நடத்த ஈரானுக்கு முழு உரிமை உள்ளது. இருப்பினும், பிராந்தியத்தில் அமைதிக் கடைபிடிக்க தேவையில்லாத மோதல்களை ஈரான் தவிர்க்க வேண்டும், இவ்வாறு கூறியுள்ளது.
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல், கடந்த 2 ஆண்டுகளாக போர் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
