புதுடில்லி: தண்ணீர் கேன் போன்ற பாதுகாப்பில்லாத பொருட்களில் பெட்ரோல் விநியோகித்தால் கடுமையான நடவடிக்கை

புதுடில்லி: தண்ணீர் கேன் போன்ற பாதுகாப்பில்லாத பொருட்களில் பெட்ரோல் விநியோகித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோல் பங்க்குகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்; நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில், (பிளாஸ்டிக் தண்ணீர் கேன்) பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்கப்பட்டது கவனத்திற்கு வந்துள்ளது.

பெட்ரோல் அல்லது எந்தவொரு எரிபொருளையும் தளர்வான அல்லது பொருத்தமில்லாத பொருட்களில் வாங்கவோ அல்லது சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட அந்த பெட்ரோல் பங்க் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை வழங்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும், டீலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link