மாஸ்கோ: ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவிற்கு மாற்ற வேண்டும் என்ற ரஷ்ய அதிபர் புடினின் யோசனையை

மாஸ்கோ: ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவிற்கு மாற்ற வேண்டும் என்ற ரஷ்ய அதிபர் புடினின் யோசனையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல், 2 வாரங்களைக் கடந்து விட்டது. அணு ஆயுதங்கள் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டால், பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வாய்ப்பு கொடுத்தார். ஆனால், நிபந்தனையை ஏற்க மறுத்தால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், போர் நிறுத்தம் கொண்டு வரும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவுக்கு மாற்றலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்மொழிந்தார். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஆலோசனையை நிராகரித்ததாக ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிடம் சுமார் 450 கிலோ கிராம் எடையுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உள்ளது. தற்போதைய போருக்கு இதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் ஆயுதங்களாக மாற்றமுடியும் என்ற நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தி, 10 அணு குண்டுகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் தொழில்நுட்பத் திறன் கொண்ட சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. போருக்கு முன்பாகவே, யுரேனியத்தை ரஷ்யாவுக்கு அனுப்ப ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதிபர் டிரம்ப் இந்த முடிவில் இருந்து தற்போது பின்வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், ஈரானிடம் இருக்கும் யுரேனிய கையிருப்பை முழுமையாக செயலிக்கச் செய்வது அல்லது பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதிலே அமெரிக்காவும், இஸ்ரேலும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் ஈரானின் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யா சேமித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link