கரூர்: கரூரில் கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர்.
கரூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ், வெள்ளியணையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக, பஸ் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த சமயம், புலியூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றி சென்ற சரக்கு ரயில் வந்துள்ளது. இதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது.
இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
