நட்பு கால்பந்து: இந்தியா வெற்றி

யாங்கோன்: நட்பு கால்பந்து போட்டியில் அசத்திய இளம் இந்திய பெண்கள் அணி 3-2 என, மியான்மரை வீழ்த்தியது.

சீனாவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 10வது சீசன் (மே 1-17) நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா (மே 2), ஜப்பான் (மே 5), லெபனான் (மே 8) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இத்தொடருக்கு தயாராகும் விதமாக மியான்மர் சென்ற இளம் இந்திய பெண்கள் அணி, 2 நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா 2-0 என வென்றது.

இரண்டாவது போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு செஞ்சம் (33வது நிமிடம்), அனுஷ்கா குமாரி (88வது), ஜோயா (90+1வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மியான்மர் சார்பில் வார் கியாவ் (12வது நிமிடம்), மே ஜிதார் (45வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர்.

Source link