சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பல்பொருள் அங்காடி, மருந்தகம், காய்கறி கடைகள் போன்றவற்றை நடத்தி வருகின்றன. அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
தற்போது, அமலில் உள்ள ஊதிய ஒப்பந்தம், 2025 மார்ச், 31ல் முடிந்த நிலையில், ஊதிய உயர்வை வழங்குமாறு, அரசுக்கு பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, ஒவ்வொரு பண்டசாலையும் ஈட்டும் நிகர லாபம் அடிப்படையில் பணியாளர்களுக்கு, 10 சதவீதம் முதல், 22 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி, கூட்டுறவு துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதனால், ஒருவருக்கு, 7,000 முதல், 15,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
