புதுடில்லி: வடிகால், சாலை இணைப்பு திட்டங்களை, முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார். ஹைதர்பூர் பிரதான

புதுடில்லி: வடிகால், சாலை இணைப்பு திட்டங்களை, முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார்.

ஹைதர்பூர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணியை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது, ரேகா கூறுகையில், “நீர் தேங்குவதை தடுக்க சாலைகளை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வடிகால் அமைப்பை சீரமைப்பது முக்கியம். இந்த திட்டம், ‘புதிய முதன்மை வடிகால் திட்டம் -2025’ன் கீழ் செய்யப்படுகிறது. வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் வாயிலாக இந்தப் பணி செய்யப்படும்,”என்றார்.

சாலை எண் – 319, 320, சவுத்ரி மெஹர் சந்த் மார்க், சுவாமி ஷ்ரத்தானந்த் சரஸ்வதி மார்க் மற்றும் ஷாலிமார் பாக்- பாலத்தின் கீழ் செல்லும் சாலைப் பணிகளையும் ரேகா ஆய்வு செய்தார்.

மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஷாலிமர் பாக் சந்திப்பில், ஸ்லிப் ரோடு’ அமைக்கும் பணியையும், ‘யு டர்ன்’ வளைவு ஆகியவற்றையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

சாகிப்பூர் கிராமத்தில், ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்’ ஆரம்ப சுகாதார நிலையமும் நேற்று திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சிங்கல்பூர் லேபர் சந்திப்பில் நடக்கும் சாலை விரிவாக்கப் பணி மற்றும் வடிகால் மேம்பாட்டுப் பணிகளை ரேகா குப்தா திடீர் ஆய்வு செய்தார். பணிகளின் தரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பராமரிக்கவும், திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Source link