சென்னை: சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலி ல் இன்று, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு மாநாடு நடக்க உள்ளது.
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட மாநாட்டுக்கு, காவல் துறை தடை விதித்தது. அதை எதிர்த்து, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளரங்கில் மட்டும் மாநாடு நடத்த அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 6:00 முதல், மாலை 6:00 மணி வரை, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., தி டலில் மாநாடு நடக்கிறது.
தமிழ் அரங்கம், ஆன்மிக அரங்கம், சமுதாய தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் ஆகியவை நடக்க உள்ளன.
இதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக, அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
