மதுரை: ''தவெகவும், விஜய்யும் கடசியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால் எனது பதிலும்

மதுரை: ”தவெகவும், விஜய்யும் கடசியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால் எனது பதிலும் மிகக்கடுமையாக இருக்கும்,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பதிலடி

இது தொடர்பாக மதுரையில் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: நான் இன்னும் தவெகவையும், விஜயையும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. அடிக்க ஆரம்பிப்பேன். இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஏனென்றால், தமிழக அரசியலில் பேச்சை மாற்றி பேசும் ஆள் நான் கிடையாது. அரசியலுக்கு விஜய் வந்த முதல் நாள் கூறியது அதே கருத்தை தான் சொல்கிறேன். புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். எங்களுடன் கூட்டணிக்கு சேரவில்லை என்பதற்காக நான் மாற்றி பேசமாட்டேன். அவர் பாதையில் அவர் போகட்டும். அதே நேரத்தில் டப்பா இன்ஜின் என அவர் சொன்னதற்கான பதிலடி நான் கொடுத்துவிட்டேன்.

நாகரிகமான அரசியல்

ஆனால், தவெகவும், விஜய்யும் கட்சியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால் எனது பதிலும் மிகக்கடுமையாக இருக்கும். எந்தளவுக்கும் கீழே இறங்கி பேசுவேன். விஜய் மேலேயும் நான் போவேன். அது வேண்டாம். நாகரிகமான அரசியல் என விஜய் சொன்னதால் எனது பதிலும் இன்று நாகரிகமாக இருக்கிறது. 2வது கட்ட 3வது கட்ட ஆட்கள், 4 கட்சி மாறி வந்தவர்களை வைத்துக் கொண்டு எந்தளவுக்கும் கீழே இறங்கி போக போக வேண்டும் என நினைத்தால், அதே விஜய்க்கு, அதே தவெகவுக்கு, அதே பாணியில் அதை விட சிறப்பாக பதில் சொல்லத் தெரியும். வேண்டாம் என நினைக்கிறேன்.

எச்சரிக்கை

அரசியல் களம் நாகரிகமாக இருக்கட்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். மக்கள் முன்பு அவர் கருத்துக்களை வைக்கட்டும். மின்னணு ஓட்டு இயந்திரத்தில், வாக்காளர்கள், தலைவர்கள் சொல்வதை கேட்டு முடிவு செய்வார்கள். காத்திருப்போம். தேஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உழைத்து கொண்டு இருக்கிறோம்.அதனால் சில பேருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனவே இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளட்டும்.

திமுகவினர் தான்

சட்டத்திற்கு புறம்பான கல்குவாரியில் படம் பிடித்த நிருபரை தாக்கியதில் மவுனம். இன்று அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு போடவும் ஒரு கும்பல் கிளம்பி உள்ளது. இதில்,முதல்வர் நேரில் தலையிட வேண்டும். அவர் கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என நம்பலாம்.கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியது திமுகவினர் தான்.

ஒன்று திமுகவினர் தான் கஞ்சா விற்று மாட்டுகின்றனர். அல்லது எம்எல்ஏக்கள் நிருபர்களை தாக்குகின்றனர். இதை விட சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கிறது என்பதை காட்டுவதற்கு வேறு என்ன படம் வேண்டும்.

உடனடியாக வழக்குப்போட்டு எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமல், உப்புக்கு சப்பாணியாக கரூர் காவல்துறையை வைத்துக் கொண்டு, நிருபரை குற்றவாளியாக கட்டமைப்பது கண்டனத்துக்கு உரியது.

திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தது என்பது தமிழக அரசும், முதல்வரும் கொடுத்ததாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாவட்ட கலெக்டர் என்பவர் முதல்வரை பிரதிநிதிப்படுத்துபவர். மாவட்டத்தில் அரசு என்பது கலெக்டர், போலீஸ் கண்காணிப்பாளர், கமிஷனர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கிறார் என்றால், விஷயம் எவ்வளவு தீவிரமாக செல்கிறது.

சிறுபான்மையினரை ஓட்டு வங்கி அரசியலுக்காக தாஜா செய்ய பிரச்சனையை பெரிதாக்கி இந்த நிலைமைக்கு முதல்வர் கொண்டு வந்துநிறுத்தி உள்ளார். இதில், கலெக்டர், கமிஷனர் பலிகடா ஆக உள்ளனர்.

மேல் இருந்து கொடுத்த அழுத்தத்திற்கு பணிந்து கலெக்டர், கமிஷனர் கடமையை மறந்து நீதிமன்றத்தில் வெட்கிதலை குனிய அளவுக்கு வைத்துள்ளனர்.

காங்கிரஸ் அழிந்தது

பல ஆண்டுகளாக காங்கிரஸ் மாநிலமாக தமிழகம் இருந்துள்ளது. அக்கட்சியை விரும்பும் மாநிலமாக இருந்தது. ராஜாஜி, காமராஜர் வரை நிறைய தலைவர்கள் இருந்துள்ளனர். பலர் முதல்வராக பதவி வகித்துள்ளனர். இன்று காங்கிரசின் நிலை, பிரவின் சக்கரவர்த்தி கூறுவது போன்று இருக்கிறது. டில்லியை எதிர்பார்த்து கொண்டு இருப்பதால் தான் காங்கிரஸ் அழிந்தது.

காமராஜர் எப்படி ஆட்சி நடத்தினார்.அதன் பிறகு இந்திரா தலைமை பதவிக்கு வந்ததும், காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக 1977 ல் திமுக உடன் கூட்டணி வைத்தார். ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் நிற்காமல் லோக்சபா தொகுதியில் பாதியில் நின்றது . அன்று காங்கிரஸ் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது.

2011 ல் 63ல் போட்டியிட்டனர். அதன் பிறகு 40 க்கும், 25 தொகுதிக்கு வந்துவிட்டது. 60ல் நின்ற கட்சி 10 ஆண்டுகளில் வெறும் 25 தொகுதிகளுக்கு வந்துவிட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source link