போரால் பொலிவிழந்த தங்கம் விலை உயராமல் இருப்பது ஏன்?

போருக்கான பதற்ற சூழல் உருவானபோது, தினம் ஒரு உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்த தங்கத்தின் விலை. அப்போது பாதுகாப்பான ஒரு முதலீடாக தங்கம் கருதப்பட்டதால், அதன் விலை அதிகரித்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. போர் நடந்துகொண்டிருக்கிறது. பல நாடுகள் தவிக்கின்றன. பாதுகாப்பான முதலீடாக கூறப்பட்ட தங்கம் விலை உயரவில்லை. ஏன் இந்த முரண்பாடு?

இப்படி ஒரு கேள்வி முதலீட்டாளர்கள் பலருக்கு எழுந்திருக்கும். ஆனால், கேள்வி எழுப்புவதற்கு முன் நாம் அதன் விலை நகர்வை கவனிக்க வேண்டியிருக்கிறது. போர் துவங்குவதற்கு முன்பே தங்கம் விலை பெரிதும் உயர்ந்திருந்தது.

2025ம் ஆண்டில் தங்கம் விலை கிட்டத்தட்ட 65 சதவீதம் உயர்ந்த நிலையில், 2026 துவக்கத்தில் மேலும் 20 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. கடந்த ஜனவரி 28ம் தேதி அன்று சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) 5,418 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

பிறகு, விலை மெல்ல சரிவடைந்து குறுகிய வரம்பில் நகர துவங்கியது. பிப்ரவரி 27ம் தேதி விலை தங்கம் கிட்டத்தட்ட 5,244 டாலராக இருந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் அது 5,120 டாலர் அளவுக்கு குறைந்தது.

விலை குறைய வாய்ப்பு போ ரினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து செலவுகள், விலைவாசியும் உயர்ந்துள்ளதால், பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் உயர்ந்தால், வங்கிகளில் வட்டி விகிதங்கள் விரைவில் குறைய வாய்ப்பில்லை. பொதுவாக, வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் பிக்சட் டிபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் , தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தால், வட்டி வருமானம் கிடைக்காது. தேவை குறைந்துள்ளதே தங்கம் விலை சரிய காரணமாக உள்ளது. ஆனால், இந்த சரிவு தற்காலிகமானதுதான். கச்சா எண்ணெய் விலை குறையும்போது, தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. எனவே, நீண்டகால அடிப்படையில் சிறிது சிறிதாக தங்க இ.டி.எப்., மற்றும் நகைகளிலும் முதலீடு செய்யலாம்.தற்போதைய கணிப்பின்படி, 10 கிராம் தங்கம் விலை 1.30 லட்சம் ரூபாயாக குறைய வாய்ப்புள்ளது. – ஞானசேகரன், கமாடிட்டி நிபுணர்

Source link