சென்னை: காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர்

சென்னை: காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, பல்வேறு குழுக்களை, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் எம்.பி., செல்லக்குமார், எம்.பி., மாணிக்கம் தாகூர், முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், அழகிரி உள்ளிட்ட 37 பேர் கொண்ட, மாநில தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மாணிக்கம் தாகூர் தலைமையில், 12 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு, செல்லக்குமார் தலைமையில், 51 பேர் கொண்ட பிரசார குழு, கார்த்தி சிதம்பரம் தலைமையில், 26 பேர் தேர்தல் அறிக்கை குழு, விஜய் வசந்த் தலைமையில், 73 பேர் கொண்ட ஊடக மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து வந்த மாணிக்கம் தாகூர் தலைமையில், தேர்தல் மேலாண்மை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

Source link