பெங்களூரு: இந்திய ஓபன் ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் வெள்ளி வென்றார்.
பெங்களூருவில், இந்திய ஓபன் ‘ஜம்ஸ்’ போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பைனலில், 16.78 மீ., தாண்டிய தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ‘ஏர் போர்ஸ்’ அணியின் அப்துல்லா அபூபக்கர் (16.83 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் ஜெய்லி வெனிஸ்டர் (16.48 மீ.,) வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் மகாராஷ்டிராவின் சர்வேஷ் அனில் குஷாரே (2.16 மீ.,) தங்கம் வென்றார். ம.பி.,யின் ஆதித்யா ரகுவன்ஷி (2.13 மீ.,), ஒடிசாவின் ஸ்வாதின் குமார் (2.13 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான ‘போல் வால்ட்’ போட்டியில் ம.பி.,யின் தேவ் மீனா (5.25 மீ.,) தங்கம் வென்றார். மற்றொரு ம.பி., வீரர் குல்தீப் குமார் (5.25 மீ.,) வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தமிழகத்தின் கவுதம் (5.10 மீ.,) வெண்கலத்தை கைப்பற்றினார்.
