நமது நிருபர் ஈரானின் தொடர் தாக்குதல் எதிரொலியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க

நமது நிருபர்

ஈரானின் தொடர் தாக்குதல் எதிரொலியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்15 நாட்களை கடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர் நிற்பதற்கான எந்த வழிகளும் தென்படவில்லை. ஈராக்கில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்க குடிமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்களை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் வழங்கி இருக்கிறது.

இது குறித்து, அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈராக் வான்வெளியில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் தொடர்ந்து ஆபத்து ஏற்படும் அபாயத்தின் காரணமாக, பாக்தாத்தில் உள்ள தூதரகம் மற்றும் எர்பில் உள்ள துணைத் தூதரகத்திற்கு வர முயற்சிக்க வேண்டாம்.

ஈராக்கின் வான்வெளி மூடப்பட்டிருப்பதால், ஈராக்கை விட்டு வெளியேற முயற்சிக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவி வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.31 லட்சம் கோடி இழப்பு

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் ரூ.31 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 4,750 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

Source link