மல்யுத்தம்: சுஜீத் கலக்கல்

ஜாக்ரெப்: ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த தொடரில் பைனலுக்கு முன்னேறினார் சுஜீத்.

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில், சர்வதேச மல்யுத்த ஓபன் ‘ரேங்கிங்’ தொடர் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. 65 கிலோ பிரிவில் இந்தியாவின் சுஜீத், காலிறுதியில் பிரான்சின் காம்ஜத்தை 10-0 என வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் சுஜீத், அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபர் மோதினர். இதில் 11-0 என வென்ற சுஜீத், பைனலுக்கு முன்னேறினார்.

70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிமன்யு, 0-10 என ஈரானின் சினாவிடம் தோல்வியடைந்தார். 86 கிலோ பிரிவு தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சந்தீப் சிங், 0-11 என அமெரிக்காவின் வாலன்சியாவிடம் தோற்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், 61 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் ‘ரவுண்டு ராபின்’ முறையில் போட்டி நடந்தன. முதல் போட்டியில் தோற்ற அமன், அடுத்த போட்டியில் 12-2 என ஈரானின் ரேஜாவை வீழ்த்தினார். 3வது போட்டியில் அமெரிக்காவின் ஆஸ்டினிடம் 0-8 என தோற்றார். பின் நடந்த 4வது போட்டியில் அமன், பிலிப்பைன்சின் அப்ருமைலாவை ‘நாக் அவுட்’ முறையில் வென்றார்.

Source link