சென்னை: 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: ‘தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: தமிழக மக்களின் மனநிலையை, முதல்வர் ஸ்டாலின் மறைத்து, தனக்கு சாதகமானதை மட்டும்தான் பேசுவார். அப்படிதான், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு இருக்கிறது என சொல்கிறார். இரண்டு வயது குழந்தை முதல் 60 வயது பெண்கள் வரை, வன்கொடுமை நடக்கிறது. சட்டம் – ஒழுங்கை முதல்வர் சரியாக கவனிக்காததே இதற்கு காரணம். பின்பு, எப்படி பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் 300 மடங்கு அதிகரித்து இருப்பதால், எந்தத் தொழிலும் நடப்பதில்லை. காற்றாலையில் பெயர் மாற்றத்துக்கே, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாக்குகின்றனர். மின்சாரத் துறைக்கு அமைச்சர் ஒருவராக இருந்தாலும், பினாமி அமைச்சராக இன்னொருவர் செயல்படுகிறார்.

எல்லாமே மக்களுக்கும் தெரியும். அதனால், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிதான் வெற்றி பெறும். மொத்தத்தில் தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை. நடிகர் விஜயுடன் கூட்டணி இல்லை என, பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். ஆனால், டில்லியில் என்ன நடக்கிறது என எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link