டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ்

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 2 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போர் காரணமாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் ஈரான் தயாராக உள்ளது. அண்டை நாடுகளில் உள்ள பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருக்கக்கூடும். இது குறித்து அண்டை நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு விசாரணை நடத்த ஈரான் தயாராக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், அவர் காபி ஷாப்பில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Source link