மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து

புதுடில்லி: அசாதாரண சூழல் நிலவுவதால், மேற்காசிய நாடுகளில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடுகளில், மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், இணைப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக, மேற்காசிய நாடுகளில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அப்பகுதி களில் நடக்க இருந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், குறிப்பிட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று முதல் ஏப்.,10 வரை நடக்க இருந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு, உரிய காலத்தில் தேர்வுகள் நடத்தி, முடிவுகள் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link