லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்:

கோவை, தண்ணீர் பந்தல் பகுதியில், வீடு கட்டுமானம் முடிந்து, தற்காலிக மின் இணைப்பை, வீட்டு மின் இணைப்பாக மாற்ற விண்ணப்பித்தேன். ஆய்வுக்கு வந்த போர்மேன் ரூ.2000 வாங்கினார். அருகில் மின் கம்பி செல்வதால், ஒரு நடைமுறையைக் கூறி, அதிகாரப் பூர்வமாக பில்லுடன் ரூ.13,000 வாங்கினர்.

ஆனால், இதைச் செயல்படுத்த போர்மேன், இளநிலை மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கு விண்ணப்பத்துக்காக ரூ.2,000 மதிப்பீட்டுக்கு ரூ.1,500, பொருட்கள் மற்றும் தொழிலாளர் பணிக்கு ரூ.8,000 என வாங்கினர். ரசீதுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு மேல், இவர்களுக்கு எதற்காக தனிப்பட்ட முறையில் பணம் கொடுக்க வேண்டும் என, எனக்குப் புரியவில்லை.

பணம் கொடுத்தாலும், 3 வார தொடர் நினைவூட்டலுக்குப் பிறகே, புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டது. புதிய மின் இணைப்புக்காக மொத்தம் ரூ.9,500 லஞ்சமாக கொடுத்தேன். இதன்பிறகும் பிரச்னை தொடர்கிறது. மீட்டரில் ‘சீல்’ வைக்கப் படவில்லை. மும்முனை மின்சாரத்தில், ஒரு முனையில் மின்சாரம் வரவில்லை. இதற்காக லைன்மேனை அணுகினால், ‘லேபர் சார்ஜ்’ என்ற பெயரில் ரூ.1,500 கூடுதலாகக் கேட்கிறார்.

புதிய மின் இணைப்பு பெற 2 மாதம் போராட வேண்டியிருக்கிறது. முறையான கட்டணம் தவிர, தேவையற்ற நிதியிழப்பு. போதாக்குறைக்கு மன உளைச்சல் வேறு. இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்களா?

தொடரும்…

Image 1549479

Source link