98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்; அவதாருக்கு ஆஸ்கர் விருது

நமது நிருபர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ‘அவதார் : பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும்.

அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது. விருது வழங்கும் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

விருதுகளை பெற்ற படங்கள் விபரம் பின்வருமாறு:

* வெப்பன்ஸ் படத்தில் நடித்த ஏமி மேடிகனுக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது.

* தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்- சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது.

* ‘அவதார் : பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் சிறந்த ‘VISUAL EFFECTS’க்கான ஆஸ்கர் விருதை வென்றது.

Source link