தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை எதற்காக இந்த நீண்ட இடைவெளி? | Why is the counting of votes taking place so late before the 2026 five-state elections?

தேர்தல் அறிவிப்பு :

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதிக்கும், அசாமில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், கேரளாவிலும் ஏப்ரல் 9-ம் தேதியிலும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நான்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகளை மே நான்காம் தேதி அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தேர்தல் தேதி

தமிழ்நாடு தேர்தல் தேதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேட்புமனு தாக்கல் 30.03.2026 தொடங்கி 06.04.2026 தேதி வரை நடைபெறுகிறது. அடுத்ததாக வேட்புமனு பரிசீலனை 07.04.2026 தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திருப்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09.04.2026. இதனைத் தொடர்ந்து 23.04.2026 தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மே 04-ம் தேதி நடைபெறவுள்ளது. மூன்று இடங்களுக்கு வெகு சீக்கிரம் தேர்தலை நடத்திவிட்டு, தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு மிகவும் தாமதமாகத் தேர்தலை நடத்துவதிலும், ஐந்து நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையை நடத்துவதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

Source link