வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் தங்கத்துக்கு இனி எடை தான் வரம்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணியரும் இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவது குறித்த விதிகளில், மத்திய அரசு, பட்ஜெட்டில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் ‘ஐகுளோபல் ஆல்டர்நேட்’ நிறுவனர் சி.கே.சிவராம்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த விதிகளின்படி, தங்கம் கொண்டு வருவதற்கான வரம்பு, ரூபாய் மதிப்பில் கணக்கிடப்பட்டது.

அப்போது, ஒரு சவரன் தங்கம் குறைந்த விலையில் இருந்ததால், ஓரளவுக்காவது தங்கத்தை வாங்கி வர முடிந்தது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டதால், ஒரு சவரன் கூட வாங்கி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ரூபாய் மதிப்பு’ அடிப்படையில் இல்லாமல் ‘எடை’ அடிப்படையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. துபாய் போன்ற நாடுகளிலிருந்து தங்கம் வாங்கி வருபவர்களுக்கு இந்த புதிய விதிகள் பெரும் நிம்மதியை தந்துள்ளன.

Image 1531275

இந்த சலுகை விமானம் அல்லது கடல் வழியாக வருபவர்களுக்கு மட்டுமே; சாலை மார்க்கமாக வருபவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. அதேபோல, தங்கம் வாங்கியதற்கான அசல் ரசீது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். சுங்கத் துறை அதிகாரிகள் கேட்டால் அதைச் சமர்ப்பிப்பது அவசியம்.

வெளிநாடுகளில் குறிப்பாக, துபாயில் தங்கத்தின் தரம் மற்றும் குறைவான செய்கூலி போன்றவற்றால் அங்கு தங்கம் வாங்க விரும்புகின்றனர்.

அங்கு 5 சதவீத மதிப்பு கூட்டு வரி வசூலிக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் அந்த வரியை திரும்ப பெற்று கொள்ளலாம்.

இதனால், அசல் விலைக்கு தங்கம் கிடைப்பதுடன், இந்தியாவை விட சவரனுக்கு சில ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.

‘ரூபாய் மதிப்பு’ அடிப்படையில் இல்லாமல், ‘எடை’ அடிப்படையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கொண்டு வருவதற்கு வரம்பு:

வகை பழைய விதி (மதிப்பு) புதிய விதி (எடை)

பெண்கள் ரூ. 1,00,000 வரை 40 கிராம் (5 சவரன்)

ஆண்கள் ரூ. 50,000 வரை 20 கிராம் (2.5 சவரன்)

Source link