முதல்வரால் தள்ளிப்போனது விஜயின் வேலுார் பயணம்

சென்னை: வேலுார் மாவட்டத்துக்கு, வரும் 8-ம் தேதி த.வெ.க., விஜய் தலைவர் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், முதல்வர் வருகை காரணமாக, அவரது பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:

தேர்தல் நடத்தை அறிவிப்புக்கு முன்பாக, வேலுார், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், விஜய் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிடப்பட்டது. வேலுார் மாவட்டம், அகரம்சேரியில், வரும் 8-ல், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று முதல்வர் ஸ்டாலின், வேலுார் வருவதால், த.வெ.க., கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியாது எனக்கூறி, அனுமதி மறுத்து விட்டது. இதனால், வேலுார் கூட்டத்தை தள்ளிவைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதற்கிடையே, சேலத்தில் மகுடஞ்சாவடி அல்லது சீலநாயக்கன்பட்டியில், வரும் 13-ம் தேதி த.வெ.க., பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கான அனுமதி கேட்டு த.வெ.க., சார்பில், போலீசாரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் நிகழ்ச்சி முடிந்தபின், வேலுாரில் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்படும். அதற்குள், திருநெல்வேலி, தர்மபுரியில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தால், அங்கு முதலில் நடத்தவும் ஆலோசனை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link