செய்திகளே நிப்டியின் போக்கை தீர்மானிக்கும்

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,462.50 23,492.40 23,112.00 23,151.10

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 488 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி 100’ குறியீடு, குறைந்தபட்சமாக 2.16 சதவிகித இறக்கத்துடனும், ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு, அதிகபட்சமாக 2.91 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு, குறைந்தபட்சமாக 0.55 சதவிகித இறக்கத்துடனும்; ‘நிப்டி மெட்டல்’ குறியீடு அதிகபட்சமாக 4.82 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,315 பங்குகளில், 578 ஏற்றத்துடனும்; 2,644 இறக்கத்துடனும்; 93 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் கணிசமான இறக்கத்தை சந்தித்துள்ளது. முந்தைய நாள் நிலைமையை விட குறைந்த உச்சம் மற்றும் குறைந்த நீச்சம் அதாவது ‘lower highs and lower lows’ என்ற நிலை, ஓரிரு நாட்களாக தொடர்ந்து நடப்பது சந்தையில் விற்பனை நடைபெறும் சூழல் நிலவுவதையே காட்டுகிறது. மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., நெகட்டிவ்வாக இருக்கின்ற போதிலும், ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்டிக் சற்று ‘ஓவர் சோல்டு’ நிலைமையை காட்டுவதால், சிறியதொரு ஏற்றம் (ஷார்ட் டேர்ம் டெக்னிக்கல் பவுன்ஸ் பேக்) வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இருப்பினும் செய்திகளே இதை தீர்மானிக்கும். 23,100-ஐ தாண்டி இறங்கினால் 22,800 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆதரவு 23,000 22,850 22,725

தடுப்பு 23,375 23,625 23,770

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 217.00 -4.17

டாடா ஸ்டீல் 183.01 -10.46

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 816.70 -16.05

கோட்டக் பேங்க் 367.10 -8.20

என்.டி.பி.சி., 384.05 -6.50

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 18.81 -0.50

சுஸ்லான் எனர்ஜி 41.64 -0.79

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 62.55 -2.23

அசோக் லேலண்ட் 170.99 -7.48

என்.ஹெச்.பி.சி., 75.10 0.32

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஐநாக்ஸ் விண்ட் 79.74 -3.94

பி.ஜி., எலெக்ட்ரோ பிளாஸ்ட் 502.80 -29.40

ஏஞ்சல் ஒன் 216.44 3.37

பந்தன் பேங்க் 175.80 -2.21

என்.பி.சி.சி., 83.29 -3.29

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பெட்பேங்க் பைனான்சியல் 126.90 -1.33

எல்&டி டெக்னாலஜி சர்விசஸ் 3,470.00 340.50

மாரிக்கோ லிட். 757.80 0.65

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் 1,082.00 24.20

ராஸ்ட்ரிய கெமிக்கல்ஸ் 120.80 0.13

Source link