98th Oscars: ஆஸ்கர் மேடையில் ‘சின்னர்ஸ்’ செய்த சம்பவங்கள்! |The first female cinematographer to win an Oscar – The incidents of ‘sinners’ on the Oscar stage!

ஆஸ்கர் விருது வென்ற பிறகு மேடையில் பேசிய ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ், “இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும்.

உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது அதையும் தாண்டிய மிகப்பெரிய விஷயம்.

இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்காகவும், வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து சிறுமிகளுக்காகவும் இந்த விருதை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன்.” என்றார் நெகிழ்ச்சியுடன்.

Sinners Team  - 98th Oscars

Sinners Team – 98th Oscars

இத்திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ரையன் கூக்லர் (Ryan Coogler). ‘ப்ளாக் பேந்தர்’, ‘ப்ளாக் பேந்தர் – வகண்டா பாரெவர்’ போன்ற படங்களின் இயக்குநரும் இவர்தான். இப்போது, ‘சின்னர்ஸ்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர் என்கிற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார்.

Source link