எதிர்நீச்சல் தொடரில் ஸ்ரீஜா! கனிகா வெளியேறி 8 மாதம் கழித்து புதிய ஈஸ்வரி! தாமதத்துக்கு காரணம் என்ன?

ச‌ன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `எதிர்நீச்சல்”. முதல் சீசன் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் 10 மணிக்கு மாற்றப்பட்டது.

முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய, ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா.

இரண்டாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாகப்போய்க் கொண்டிருந்த‌ சூழலில் கனிகா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.

அப்போதே நாம் இது தொடர்பாக விசாரித்து ‘எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து வெளியேறினார் கனிகா – பின்னணியில் நடந்தது என்ன?’ என்கிற டைட்டிலில் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டோம்.

பர்சனல் காரணங்களால் வெளியேறியதாகச் சிலரும், வெளிநாட்டில் செட்டில் ஆகப் போவதால் விலகினார் எனச் சிலரும் சொன்னார்கள்.

தொடரில் ஆதி குணசேகரன் கேரக்டருக்குத் தரப்படும் அளவுக்கு தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்படாததாலேயே வெளியேறினார் என்றும் சில தகவல்கள் றெக்கை கட்டின.

Source link