Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் பாலிவுட்டில் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.

“பு​தி​தாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்​கள் மிகவும் அழகாக இருக்​கிறீர்​கள், பெரிய கதா​நாயகி​யாக வரு​வீர்​கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறுவார்கள்.

தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா

உங்​கள் திறமை​யைப் பாராட்டுவதுபோல் வந்து, ‘அவரைப் போய் பாருங்​கள், இவரைச் சந்​தி​யுங்​கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்​பு​வார்​கள். இது​தான் பாலிவுட்டில் நடக்கிறது.

அறி​முகம் இல்​லாதவர்​கள் சாக்​லேட் கொடுத்தால் வாங்​கக் கூடாது என்று சிறு​வய​தில் பெற்றோர் சொல்​லிக் கொடுத்​ததை நினை​வில் கொள்ளுங்​கள்.

இங்கே கொடுக்​கப்​படு​வது உண்​மை​யான சாக்​லேட் அல்ல, அது உங்​கள் லட்​சியங்​களை​யும், ஆசைகளை​யும் முதலீ​டாகக் கொண்டு வீசப்​படும் வலை. ஏராளமான ஆண்​களும் பெண்​களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்​படுத்​தப்​பட்​டு, துஷ்பிரயோகம் செய்​யப்​பட்​டு, பின்​னர் தூக்கி வீசப்படுகிறார்​கள்.

தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா

அப்​படி வீசப்​படும்​போது, சிலர் மீள முடி​யாத பாதிப்​புக்கு உள்​ளாகிறார்​கள். சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள். இன்​னும் சிலர் மனரீ​தி​யாக உடைந்து, சொந்த ஊருக்​கே திரும்பி விடு​கிறார்​கள்” என்று பாலிவுட் குறித்து பேசியிருக்கிறார்.

Source link