சென்னை: ‘பாரத் கன்டெய்னர்’ தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவும், துாத்துக்குடி துறைமுகத்தில் வெளிப்புற துறைமுகம் அமைக்கவும், பொதுத்துறை கப்பல் நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு இடையே 59,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிஉள்ளது.
கன்டெய்னர் தயாரிப்புக்கான புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, இதற்கான, புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்குவது மற்றும் சென்னை துறைமுகம் மற்றும் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், வெளிப்புற துறைமுகங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம், டில்லியில் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
மொத்தம் 59,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன் ஒரு பகுதியாக ‘பாரத் கன்டெய்னர் ஷிப்பிங்’ என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இதில், ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ – 30 சதவீதம்; ‘கான்கார்’ – 30 சதவீதம்; ‘சாகர்மாலா பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ – 20 சதவீதம்; ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் – 10 சதவீதம்; சென்னை துறைமுக ஆணையம் – 5 சதவீதம்; துாத்துக்குடி வ.உ.சி., துறைமுக ஆணையம் – 5 சதவீதம் பங்களிப்பை அளிக்க உள்ளன.
‘
