சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், சொத்துவரி

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டில், சொத்துவரி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டது.

அதேபோல், 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஆண்டுதோறும், 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தும் நடை முறையை, 2024ல் தமிழக அரசு அமல்படுத்தியது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் சொத்துவரி உயர்த் தப்பட வேண்டும். ஆனால், வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, 2025ம் ஆண்டில், 6 சதவீத சொத்து வரி உயர்வை, தமிழக அரசு நிறுத்தி வைத்தது.

அதேநேரம், தேர்தல் முடிந்த பின், சொத்து வரி உயர்வை அமல்படுத்த, அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, உள்ளாட்சி அமைப்புகளின், வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியை பொருத்தவரை, நிதியாண்டுக்கு 2,000 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 6 சதவீத வரி உயர்வு நிறுத்தி வைப்பால், 60 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link