சாகித்ய அகாதமி: `இந்த' நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது!

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

2025-ம் ஆண்டு சாக்திய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

ச. தமிழ்ச்செல்வன் – சாகித்ய அகாதமி விருது

இந்த நிலையில், `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்காக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Source link