சென்னை: நாகை, கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்ட எஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், நாகை, கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்ட எஸ்பிக்களை மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி
கரூர் எஸ்பி ஆக – ஹரிகிரண் பிரசாத்
நாகை எஸ்பி ஆக – சுர்ஜித் குமார்
விருதுநகர் எஸ்பி ஆக- ஸ்ரீநாதா
ஈரோடு எஸ்பி ஆக – கிரண் ஸ்ருதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேர்தல் கமிஷன், மாற்றம் செய்யப்பட்ட பழைய அதிகாரிகளை தேர்தல் குறித்த பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
கரூர் எஸ்பியை மாற்ற வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார்.
