பாம்ப்ரி ஜோடி அபாரம்

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்சன் ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், ஏ.டி.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரி கோரன்சன் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், இத்தாலியின் ஆன்ட்ரியா வவாசோரி ஜோடியை சந்தித்தது.

ஒரு மணி நேரம், 30 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. ஏ.டி.பி., ‘மாஸ்டர்ஸ் 1000’ அந்தஸ்து பெற்ற தொடரின் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு முதன்முறையாக முன்னேறினார் பாம்ப்ரி. இதற்கு முன், இரண்டு முறை காலிறுதி வரை சென்றிருந்தார்.

Source link