சென்னை: 'தமிழகத்தில் டெல்டா மற் றும் தென் மாவட்டங் களில், சில இடங்களில் இன்று மித மான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ‘தமிழகத்தில் டெல்டா மற் றும் தென் மாவட்டங் களில், சில இடங்களில் இன்று மித மான மழை பெய்ய வாய்ப்பு ள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதிகாலை வேளையில், மிதமான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாகப் பதிவாக வாய்ப் புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை, 31 டிகிரி செல்ஷியஸ் ஆகப் பதிவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link