மேற்காசிய போர் நீடிப்பால் வாகன தயாரிப்பு பாதிப்பு

புதுடில்லி: மேற்காசிய போரின் காரணமாக, வாகன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வினியோக தொடர் பாதிப்பு, மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஏற்றுமதி மந்த நிலை, நிறுவன லாபத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் ஆகியவை வாகன துறையின் முதலீட்டாளர்களை கவலைப்பட வைத்துள்ளன.

அசோக் லேலண்டு, ஹூண்டாய், மாருதி, ஐச்சர், பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள், ஏற்றுமதிக்கு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளையே அதிகம் நம்பி உள்ளன. எனவே, ஏற்றுமதி பாதிப்பு, அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து செலவுகள் ஆகியவை வாகன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என இத்துறையினர் கூறுகின்றனர்.

இந்நிறுவனங்களின், பெயின்ட் ஷாப், இதர உதிரிபாக உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு இயற்கை எரிவாயு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. தற்போது, இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல நிறுவனங்களின் வாகன தயாரிப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சி.என்.ஜி., கார்களின் தேவை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி விகிதம்(%) ஹூண்டாய் 40 அசோக் லேலண்டு 30 மாருதி சுசூகி 12 ஐச்சர் 12 பஜாஜ் 10

Source link